இலங்கை தொடரில் விளையாடவுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்!

0
431
Kagiso Rabada play Sri Lanka tour news Tamil

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா, இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளராக உள்ள கார்கிஸோ ரபாடா அணியின் முதற்தர பந்து வீச்சாளராகவும் வலம் வருகின்றார்.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின், நான்காவது போட்டியின் போது ரபாடாவின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டது.

இதனால் 3 மாதங்கள் அளவில் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் ரபாடா ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது உபாதையிலிருந்து குணமடைந்து வரும் ரபாடா, அடுத்து நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுத் தொடரில் கலந்துக்கொள்வது தொடர்பில் குறிப்பிட்டுள்ள ரபாடா,

“ஒரு கட்டத்தில் ஒருவாரம் ஓய்வில் இருக்க கருதியிருந்தேன். எனினும் இறுதியில் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இலங்கை தொடருக்காக தயாராக உள்ளேன். உடல் நிலையும் சீராக உள்ளது. எனினும் வைத்தியர்கள் ஜுலை மாதம் ஆரம்பம் வரை உபாதை தொடர்பில் அவதானிக்க வேண்டும் என கூறியுள்ளனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

 

Kagiso Rabada play Sri Lanka tour news Tamil, Kagiso Rabada play Sri Lanka tour news Tamil