கோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்!

0
360

அண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million)

அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மெர்க்கலிடம் $700,000 மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் மெர்க்கல் திருமணத்தின் போது அணிந்திருந்த வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சேர்க்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். குறித்த கிரீடத்தின் விலை மட்டும் $600,000 என பிரபல பத்திரிக்கையான Daily Mail தகவல் வெளியிட்டுள்ளது.

அதே போல இளவரசர் ஹரி வடிவமைப்பில் உருவான மெர்க்கலின் நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு குறைந்தபட்சம் $187,000 ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க நகைகள் என்றால் மெர்க்கல் அணியும் $322,211 மதிப்பிலான பிரேஸ்லெட் மற்றும் $80,000 காது தோடுகள் முக்கியமானதாகும்.

Tag: British Princess Megan Markle Jewellery Worth Million