முடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்!

0
826
Causes hair fall know protect hair, tamil health news, tamil health , health tips in tamil, health tips in tamil,

{ Causes hair fall know protect hair }

முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும்.
முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும்.

முடி கொட்டுதல் நிகழும்போது, முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை தேடி உண்ண வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் கட்டாயமாக முடி கொட்டும்.

பெண்கள் தாய்மைப் பேறை அடைந்தது முதல் இரும்புச் சத்து, புரதச் சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக்காக தினமும் எடுப்பார்கள்.

இது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்தி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக, செழிப்பாகக் காணப்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு மருந்து மாத்திரைகளை உண்பதை தாய்மார்கள் நிறுத்தியதும், தானாகவே பெண்களுக்கு முடி கொட்டத் துவங்குகிறது.

அதேபோல் குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டும். ஏனெனில் பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி உண்ணும் தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும், ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை. செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான ஒரு நிகழ்வுதான் இது.

படிக்கின்ற வயதில் இருக்கும் இளம் பருவத்தினர் சிலர், படிப்பில் அதிக கவனம் செலுத்தும்போது சரியான சரிவிகித உணவை எடுப்பதில்லை. அவர்கள் முடியையும் சரியாகப் பராமரிப்பதில்லை.

குறிப்பாக அரசுத் தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்களுக்கு படிப்புச் சுமை காரணமாக, சரியான தேக பராமரிப்பின்மை காரணமாக முடி கொட்டத் துவங்குகின்றது.

உடல் ஆரோக்கியத்திற்காக அல்லாமல் நோய் எதிர்ப்பிற்காக மருந்துகளை அதிகமாக எடுப்பவர்களுக்கும் முடி அதிகமாகக் கொட்டும். வயது முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாகக் கொட்டும்.

Tags:Causes hair fall know protect hair

<<MORE BEAUTY POSTS>>

<<VISIT OUR OTHER SITES>>