ஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..!

0
627
Kaatrin Mozhi movie Shooting start today,Kaatrin Mozhi movie Shooting start,Kaatrin Mozhi movie Shooting,Kaatrin Mozhi movie,Kaatrin Mozhi

ஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்தின் படப்பிடிப்பை நடிகர்கள் சூர்யா, சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.(Kaatrin Mozhi movie Shooting start today)

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “மொழி”.

இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்குப் பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “காற்றின் மொழி” படத்தில் இணைகிறது.

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன், S விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற “துமாரி சுலு” திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று எளிமையாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா கேமராவை ஆன் செய்ய நடிகர் சிவகுமார் கிளாப் போர்டை பிடித்து படத்தை துவக்கி வைத்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. விதார்த், லட்சுமி மஞ்சு, M.S. பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை A.H. காஷீப், பாடல் மதன் கார்க்கி, கேமரா மகேஷ் முத்துசாமி, கலை கதிர், உடை பூர்ணிமா, எடிட்டர் பிரவீன் KL, வசனம் பொன் பார்த்திபன், PRO ஜான்சன். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் கதைப் பிரகாரம், எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகும் குடும்பத்தலைவி சந்திக்கும் பிரச்சினைகளையே எடுத்துரைக்கின்றது.

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் சுலோச்சனா என்ற நாயகி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அவரது கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

காலா படத்தை தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Kaatrin Mozhi movie Shooting start today

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 04-06-2018