காதல் விவகாரத்தில் நண்பன் கொலை!

0
513
angry young man angry boyfriend strangled strangled friend crash

angry young man angry boyfriend strangled strangled friend crash

தனது காதலியுடன் நட்பாகப் பேசிய காரணத்தால் கோபமடைந்த இளைஞர்  ஒருவர் நண்பன் ஒருவரை மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பின்னால் இருந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு விபத்து நடந்தமை போல் நடித்துத்து தப்பிக்க நினைத்து சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று கோயம்பேட்டில் இடம்பெற்றுள்ளது

கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (45). இவரது மனைவி கலா (35). இவர்களது மகன் கணேஷ் (22) இவர் டிங்கரிங் வேலை செய்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றபோது நள்ளிரவில் விபத்து ஏற்பட்டு சாலைத் தடுப்பில் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

கணேஷின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து என்று நினைத்திருந்த பொலிஸாருக்கு பிரேதப் பரிசோதனையில் கணேஷின் இடுப்பில் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கணேஷுக்கு நடந்தது விபத்து அல்ல சந்தேக மரணம் என முடிவு செய்த பொலிஸார் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனனர்.

விசாரணையில் கணேஷ் கடைசியாக  தொலைபேசியில் பேசிய நபர் மற்றும் அவருடன் இருந்தவர் யார் என்று விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது.

மேலும், ராஜா குறித்து உயிரிழந்த கணேஷின் நண்பர்கள், தாயார் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, கணேஷைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ராஜா, சில தகவல்களை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

“தான் காதலித்த பெண்ணை கணேஷ் நட்பாக்கிக் கொண்டதால் அந்தப்பெண் தன்னோடு பழகவில்லை. அந்தக் கோபத்தில் ராஜா உயிருடன் இருக்கக்கூடாது என்று நினைத்தேன்.

சம்பவ நாளன்று கணேஷை போனில் அழைத்தேன். கணேஷும் வந்தார். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அப்போது கணேஷ் செய்தது எனக்கு ஞாபகம் வந்தது.

உடனடியாக ஆத்திரத்தில் கத்தியை எடுத்து இடுப்பில் குத்தினேன்இ பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு வண்டியிலிருந்து குதித்துவிட்டேன். அப்போது கணேஷ் ஓட்டிய மோட்டார் பைக் சாலை தடுப்பில் மோதியது. நான் ஓடிவிட்டேன். கணேஷ் இறந்தது விபத்து போன்று மாறியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எப்படி மாட்டிக்கொண்டேன் என்று தெரியவில்லை” என்று கூறியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் ராஜா 17 வயது என்பதால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்.

angry young man angry boyfriend strangled strangled friend crash

More Tamil News

Tamil News Group websites :