பெண்களே இல்லாத சீன கிராமம் : பிரமச்சாரியாக வாழும் ஆண்கள்

0
707
China Girls Without Village Latest Gossip

(China Girls Without Village Latest Gossip)

ஒரு பேச்சுக்கு சொல்லலாம் ஆண்கள் இல்லாத உலகம் நன்றாக இருக்கும் பெண்கள் இல்லாத உலகம் அமைதியாக இருக்குமென்று ,ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படாது .ஆண் ,பெண் என்ற இருபாலினமும் கட்டயாம் இருக்க வேண்டும் .இது இயற்கை நியதி ,

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் சில ஆண்கள் பெண்கள் கிடைக்காததால் பிரமச்சாரியாகவே வாழ்கிறார்கள் .

சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் ஆண்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .

இந்த லாவ்யா கிராமம் உள்ளூரில் ‘பிரம்மசாரி கிரமம்‘ என்று அறியப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1600 பேர் வாழ்கின்ற அந்த கிராமத்தில் 30 முதல் 55 வயது வரையானோரில் 112 பேர் திருமணமாகாமல் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்வதாக பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்திற்கு மாறான மிக உயர்ந்த பதிவாகும்.

இந்த கிராமத்தில் ஆண்கள் பலர் பிரம்மசாரியாக வாழ்வதற்கான ஆதார அடிப்படையை நோக்கினால், பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் ஒன்று சீனாவில் காணப்படும் ஆண்-பெண் சமசீரின்மை.

சீனாவில் பெண்களை விட ஆண்களே அதிகம். 100 பெண்களுக்கு 115 ஆண்கள் இப்போது உள்ளனர்.

வரலாற்றுப்பூர்வமாகவே பெண்களுக்கு மேலாக ஆண்களுக்கு அதிக ஆதரவு அளிக்கும் கலாசாரம் சீனாவுடையது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த “ஒரு குழந்தை கொள்கை” திட்டமானது, கட்டாய கருச்சிதைவு மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிவிட்டது..

இது மட்டுமே ஒரேயொரு பிரம்மசாரி நகரம் என்பது அல்ல. வறுமையிலிருந்து தப்புவது, நிலத்தோடு ஒன்றி வாழ்வது, பாலின விகிதாசார சமத்துவமின்மை, வயதான உறவினருக்கு ஆற்ற வேண்டிய கடமை ஆகியவற்றால், கிராமப்புற சீனாவின் வாழ்க்கையில் இருக்கும் குழப்பத்தை இந்த கிராமம் காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:China Girls Without Village Latest Gossip