பிரான்ஸில், வேகமாக பயணித்த கார்- பெண் பலி!

0
742
car drove fast Blanc-Mesnil town- woman died

அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். car drove fast Blanc-Mesnil town- woman died

Blanc-Mesnil நகரில் உள்ள Avenue Charles-Floquet வீதியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Peugeot 607 ரக கார் ஒன்று அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்துகொண்டிருந்த Citroën C5 காருடன் மோதியுள்ளது. இதனால் எதிரே வந்த காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு கார்களின் சாரதிகளும் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர்.

அங்கு வந்த காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து, அதிவேகமாக காரை செலுத்தி விபத்து ஏற்படுத்திய நபருக்கு சாரதி அனுமதி பத்திரம் (driving license) இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**