இன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா

0
786
Ranbir Kapoor Love Story Latest Gossip,Bollywood cinema,latest bollywood cinema gossip,Alia Bhatt Love,tamil gossip,bollywood cinema

(Ranbir Kapoor Love Story Latest Gossip )

ரன்பீர் கபூர் இந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர் மற்றும் நடிகை நீது கபூருக்கு பிறந்தவர்.இவர் பாலிவூட்டில் நுழைந்ததன் முதலே பல காதல் கிசு கிசுக்களில் அகப்பட்டவர் .

ஏறத்தாழ தனது 12வது வயதில் இருந்து காதலித்து வருகிறார் ரன்பீர் கபூர். ஆனால், ஒரே பெண்ணையா என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.

பாலிவூட்டில் ஒரு காதல் நாயகனாக வலம்வந்த ரன்பீர் தற்பொழுது ஆலியா பட்டுடன் டேடிங் செய்து வருவதாக கூறப்படுகின்றது .

ஆகையால்… ரன்பீரின் பிஞ்சு காதல் முதல் ஆலியா பட் வரை ஒரு சின்ன  ரிவைண்ட் ……

ரன்பீர் கபூரின் காதல் பயணம் ஆரம்பித்தது தனது  12வயதில் தான் .அது தான் அவரின் முதல் காதல் ,மிகவும் சிரியசான காதல் .அது பிரேக் அப் ஆகியவுடன் ரன்பீர் மிகவும் மனவுளைச்சலில் இருந்தாரம் .

2008ம் பச்னா ஏ ஹசீனோ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் ஜோடி சேர்ந்திருந்த தீபிகா படுகோனே உடன் நெருக்கமாக பழகினார் ரன்பீர் கபூர்.

மீடியாக்கள் கண்ணில் பெறும் ஈர்ப்பை ஏற்படுத்திய காதல் ஜோடிகள் என்றால் தீபிகா ரன்வீர் ஜோடி தான்.மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்கபட்ட நிலையில் ஒரு வருடத்திலே இவர்களின் காதல் முடிவிற்கு வந்து விட்டது .

2013ம் ஆண்டு ரன்பீர் கபூரும், கத்ரீனா கைபும் காதலிப்பதாக புரளிகள் கிளம்பின. இதை நம்பவைக்கும் படி ஸ்பெயின் சென்றிருந்த ரன்பீர், கத்ரீனா ஜோடி பிகினி உடையில் பீச்சில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையங்களில் வெளியாகி காட்டுத்தீ போல பரவின.

Ranbir Kapoor Love Story Latest Gossip

சரி! இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என இந்தி சினிமா உலகம் நம்பியது. இவர்கள் இருவருக்கும் நடுவே ஏதோ இருக்கிறது என்று அஜாப் பிரேம் கி கஸாப் கஹானி (2009) என்ற படத்தின் படப்பிடிப்பின் போதிருந்த கூறி வந்தனர்.

ஆனால், 2016 பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

சமீபத்தில் ஆலியா பட் நடித்து வெளியான ராஸி என்ற படம் நூறு கோடிகளுக்கு வசூல் செய்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ranbir Kapoor Love Story Latest Gossip

இப்போது ரன்பீர் கபூரின் காதலிகள் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் ஆலியா பட். ரன்பீரின் வயது 35, ஆலியாவின் வயது 25 ஏறத்தாழ இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். இருவருமே திரை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Ranbir Kapoor Love Story Latest Gossip