மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

0
839
Narendra Modi congratulates mahathir, malaysia tami news, malaysia, malaysia news, Narendra Modi,

{ Narendra Modi congratulates mahathir }

மலேசியா: தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் தமிழர்களின் நலன்களைப் புறக்கணித்து வருவதாகவும் தமிழக அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் கூறி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு இங்குள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவிற்கு வந்திருக்கும் நரேந்திர மோடி இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது டுவீட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி மலாய் மொழியில் துன் மகாதீரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தமக்கு சிறப்பான வரவேற்பு வழங்கியதற்காக நன்றியைக் கூறிக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பில் மலேசியா-இந்தியாவுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

மலாய் மொழியில் வெளியிட்ட பதிவை அவர் ஆங்கிலத்திலும் அப்படியே பதிவிட்டுள்ளார்.

சில மணி நேரங்களுக்கு பிறகு அவர் இந்தோனிசியாவின் அதிபர் ஜோக்கோ வீடோடோவிற்கும் இந்தோனிசிய மொழியில் நன்றியைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

கிழக்கு இந்திய கொள்கை திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நரேந்திர மோடி இந்தோனிசியாவிற்கு சென்றுள்ளார். அடுத்து, அவர் சிங்கப்பூரிற்கும் வருகை மேற்கொள்ளவுள்ளார்.

Tags: Narendra Modi congratulates mahathir

<< RELATED MALAYSIA NEWS>>

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

<< RELATED MALAYSIA NEWS>>