உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள விராட் கோஹ்லி!

0
690
skipper Virat Kohli provides update neck injury

(skipper Virat Kohli provides update neck injury)

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது உபாதை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விராட் கோஹ்லி. அதுமாத்திரமின்றி அதிக உடற்தகுதி பெற்றிருக்கும் வீரர் எனவும் குறிப்பிடப்பட்டு வந்தார்.

எனினும் தற்போது கழுத்து உபாதைக்கு முகங்கொடுத்துள்ள விராட் கோஹ்லி, எதிர்வரும் ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்று வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக கோஹ்லியின் உடற்தகுதியை எதிர்வரும் 15ம் திகதி நிரூபிக்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் தனது உடற்தகுதியை பெறுவதற்கான செயற்பாடுகளில் கோஹ்லி எவ்வாறு ஈடுபட்டுள்ளார் என்பதை டுவிட்டர் காணொளியொன்றின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில், “சரியான நேரத்தில் உடற்தகுதியை பெற்றுக்கொள்வதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளிவிற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். கடினமான உழைப்பின் மூலமே உடற்தகுதியை பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

french open 2018 serena williams n