மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

0
1045
Restaurant staff wash dish dirty water, malaysia tamil news, malaysia news, malaysia, raj banana leaf Restaurant malaysia ,

{ Restaurant staff wash dish dirty water }
மலேசியா: பங்சாரில் உள்ள ராஜ் வாழை இலை உணவகத்தில் கழிவு நீரை கொண்டு பாத்திரங்களை கழுவும் வீடியோ நேற்று சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதை தொடர்ந்து, ராஜ் பனான்னா லீஃப் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/DiscoverSJ/videos/1711248715624556/?t=0

பங்சார் பகுதியில் அமைதுள்ள அதன் கிளையில் ஊழியர்கள் தட்டுகளைச் சாலையில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் கழுவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருவதைத் தொடர்ந்து உணவகம் மூடப்பட்டுள்ளது.

உணவகத்தின் சுகாதாரத்தைச் சோதனையிட இன்று (மே 30) அதிகாரிகள் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, உணவுச் சுகாதார விதிமுறைகளை உணவகம் முழுமையாகப் பின்பற்றுவது உறுதியாகும்வரை உணவகம் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று கோலாலம்பூரின் மேயர் அமின் நோர்டின் கூறியுள்ளார்.

காணொளியில் ஊழியர்கள் சிலர் சாலையோரமாக அமர்ந்து அங்கு குழியில் தேங்கிக்கிடந்த பழுப்பு நிற நீரில் தட்டுகளைக் கழுவுவது காணொளியில் தெரிகின்றது.

ஊழியர்கள் அண்மையில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்று கூறி, உணவகம் Facebookஇல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

உணவகத்தின் சுகாதார தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சுகாதாரமான உணவை வழங்குவதே தங்களின் முன்னுரிமை என்றும் உணவகம் அதன் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை அன்று அதன் பங்சார் கிளையில் நோன்பு துறப்பதற்காக, இலவச விருந்திற்கு ராஜ் பனான்னா லீஃப் உணவகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Restaurant staff wash dish dirty water

<< RELATED MALAYSIA NEWS>>

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

<< RELATED MALAYSIA NEWS>>