பிரான்ஸில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

0
752
Man shot dead Menton France

முப்பது வயதான நபர் ஒருவர் Menton பகுதியில் வைத்து சுடப்பட்ட.சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நபரது வீட்டு வாசலில் நுழைந்த இரு நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Man shot dead Menton France

பொலிஸ் துப்பாக்கிதாரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த இருவரும் ஒரு போதை மருந்து கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இதற்கிடையில் Mougins பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த நபர் மீதும் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக நைஸ் பகுதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குறித்த நபர், தற்போது உடல் நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவற்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**