விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது

0
416
national accident cover week police government latest Tamil news

அவிசாவளை முதல் இரத்தினபுரி வரையிலான பிரதான வீதியின் மாதொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். two passengers bus accident nineteen injured sixteen

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கiளை ஏற்றிச்சென்ற பேருந்து பிரிதொரு பேருந்துடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
two passengers bus accident nineteen injured sixteen

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை