தமிழ் மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள புதிய உறுதிமொழி

0
180
prime minister ranil wickramasinghe meet Tamil national alliance

வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் மீதமுள்ள காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். prime minister ranil wickramasinghe meet Tamil national alliance

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அதன் பின்னர் விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள், கடற்படையின் வசமுள்ள காணிகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள படைமுகாம்கள் தொடர்பான விபரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கியுள்ளனர்.
prime minister ranil wickramasinghe meet Tamil national alliance

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை