மாயமான குளம் – அதிகாரிகளை சிறைபிடித்த கிராமம்!

0
367
magical pool village authorities captured tharapuram

magical pool village authorities captured tharapuram

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் உள்ளது செட்டிகளம். இந்த கிராம விவசாயிகள் குளம் வெட்டித்தரும்படி மாவட்ட  நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் குளம் வெட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 18ம் தேதி  தெக்காலுர் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், செட்டிகளம்  கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டத்தின் கீழ், ரூ.4லட்சத்து 96ஆயிரம் செலவில் குளம் ஒன்று வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை  வாசித்தனர். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன் திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், நஞ்சியம்பாளையம் ஊராட்சி கணக்குகள்  தணிக்கை செய்யப்பட்டது. அதில் குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு  செய்யப்பட்டுள்ள தெரியவந்தது.

இந்நிலையில், கிராமமக்கள் நேற்று ஒன்று திரண்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று,  தங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை அதை  கண்டுபிடித்துதர வேண்டும் எனக்கூறி புகார் மனுஅளித்தனர். வடிவேலு பாணியில் கிராமமக்கள் அளித்த இந்த புகார் மனுவால்  பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை பற்றி நேரில் விசாரித்து கிராம மக்களுக்கு  பதில் அளிப்பதற்காக நேற்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் சக்திவேல், உதவிபொறியாளர் கார்த்திகேயன், ஊராட்சி செயலர் நாகராஜன், மற்றும்  வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், ராகவேந்திரன் ஆகியோர் செட்டிகளம்  கிராமத்திற்கு வந்தனர்.

அப்போது, அவர்களை சிறைபிடித்த கிராமக்கள்,  தங்கள் ஊரில் ரூ.5 லட்சம் செலவில் வெட்டிய குளத்தை எங்களுக்கு  காட்டினால்தான் விடுவிப்போம் எனக்கூறினர்.சுமார் 2 மணிநேரம் நடந்த வாக்குவாதத்திற்கு பின்னர், கலெக்டர் அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் நேரில் வந்து முறைகேடு பற்றி முறையான விசாரனை நடத்தப்படும் என உறுதியளித்த பின்னர்,  சிறைபிடித்திருந்த அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

More Tamil News

Tamil News Group websites :