Youtube Background Story
காணொளிகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றது யுடியூப் தளம்.
விளையாட்டு, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்து தலைப்பிலும் இங்கு காணொளிகள் குவிந்து கிடக்கின்றன.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இத்தளத்தில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை.
ஆரம்பத்தில் யுடியூப்பில் பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் உள்ளதாகவும், இது சிறுவர்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமெனவும் பரவலாக எச்சரிக்கப்பட்டு வந்தது.
அந்தவகையில் யுடியூப்பில் மறைந்திருக்கும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான காணொளிகளில், ஆபாச காணொளிகளும் மறைவில் கொட்டிக்கிடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெளியே தெரியாத வண்ணம் மறைமுகமாக இவை இருப்பதாக எச்சரிக்கப்படுள்ளது.
சிறுவர்களுக்கு உகந்ததாக ஆரம்பிக்கும் பிளே லிஸ்டுக்கள் பின்னர் ஆபாசக் காணொளிகளைக் கொண்டவையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டப்படுகின்றது.
ஆண் பெண் உடலுறவு மற்றும் பாலியல் சில்மிஷங்கள் அடங்கிய பல விவகாரங்கள் இவ்வாறு பரவிக்கிடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வயது வந்தோருக்கான18+ காணொளிகள் அங்கு இருக்கின்றன, இதன்போது வயதை ஊர்ஜிதம் செய்யும் படி கோரப்படுகின்றது. எனினும் உண்மையான வயதை உறுதிசெய்ய யுடியூப் தவறுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
யுடியூப்பின் இத்தகைய கறுப்புப் பக்கம் சிறுவர்களில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றோரின் கவனம் மற்றும் அக்கறையும் அவசியமென ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.