சரியான தருணம், சஜித் முன்வர வேண்டும் : திஸ்ஸ

0
760
tissa attanayake

(tissa attanayake)
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் ஆசைப்படி, கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை அமைச்சர், சஜித் பிரேமதாச ஏற்கவேண்டிய இறுதி வாய்ப்பு
இ​துவென அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டால், ஐ.தே.கவின்
த​​லைமைத்துவத்தை அவரால் மறுபடியும் ஏற்கமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தின்படி, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச, தானாக முன்வந்து கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சஜித்துக்கு தலைமைத்துவத்தை வழங்காது எவரேனும் கட்சிக்குள் தடுப்பார்களானால், அது ஐ.தே.கயின் ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை