இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நீக்கம்!!!

0
521
Keaton Jennings replaces Mark Stoneman 2nd Test vs Pakistan

(Keaton Jennings replaces Mark Stoneman 2nd Test vs Pakistan)

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் ஸ்டோன்மேன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மார்க் ஸ்டோன்மேன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 13 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதன்காரணமாக அவரின் இடத்துக்கு சர்ரே அணியின் வீரர் கேட்டன் ஜென்னிங்ஸ் இணைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜென்னிங்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்குள் உள்வாங்கப்படவில்லை. எனினும் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

இவர் 2 சதங்கள் அடங்கலாக 43.79 என்ற ஓட்ட சராசரியில் 314 ஓட்டங்களை குவித்துள்ளார். இதேவேளை கடந்த மாத இறுதியில் நடைபெற்ற நோட்டிங்கம்சையர் அணிக்கெதிரான ரோயல் லண்டன் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>