மாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு!

0
721
state parties will king makers - chandrababu naidu

state parties will king makers – chandrababu naidu

ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று இணைய வேண்டும் என்று கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு நன்மை கிடைக்கும், என்றே நினைத்து அதனை ஆதரித்ததாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, ஆனால் வங்கி நடைமுறைகளில் நம்பிக்கை இழக்கும் அளவிற்கு அந்த திட்டத்தை மத்திய அரசு தவறாக செயல்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த கூட்டத்தின்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் ஆக வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது தமக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்றும், தெலுங்கு மக்களுக்காக பாடுபடவே தாம் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் வரும் 2019 நாடாளமன்றத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் எனவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :