தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!

0
1032
16 slfp members Select Separate leader

(16 slfp members Select Separate leader)
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளதாக அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”மாத்தறையில் எமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும்.

எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

இதன் அர்த்தம், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் நாங்கள் இணைவதோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன முன்னணி இணைவதோ அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை