மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

0
844
Nobel Prize Malaysian Prime Minister,malaysia tamil news, malaysia news, malaysia, mahathir

{ Nobel Prize Malaysian Prime Minister }

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் எனக் கோரும் விண்ணப்பத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

change.org எனும் இணையத் தளத்தில், அலெக்ஸான்றியா அபிஷேகம் என்பவர் அந்த விண்ணப்பத்தை முன்வைத்த ஒரே நாளில் 51ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டடுள்ளனர்.

டாக்டர் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு கொண்டிருந்த உறுதியை, அங்கீகரிக்கும் வண்ணம் அவருக்கு அந்தப் பரிசை வழங்கவேண்டும் என்று திருவாட்டி அபிஷேகம் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா, வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், சட்டத்தின் முறையான செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும் என்பதில் டாக்டர் மகாதீர் கவனம் செலுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

தமது கடந்தகாலத் தவறுகளை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்புக் கேட்டதன் மூலம் மிகச் சிறந்த மனிதர், பின்பற்றத் தகுந்த தலைவர் என்ற நிலையை டாக்டர் மகாதீர் அடைந்ததாகவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் நெல்சன் மண்டேலா என்று அவருக்குப் புகழாரம் சூட்டிய அந்த விண்ணப்பம், டாக்டர் மகாதீர் சுமுகமான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு வகைசெய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வாண்டின் நோபல் பரிசுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, கடந்த பிப்ரவரி முதல் திகதியன்று முடிவுற்றதால், திரு. மகாதீர் இந்த ஆண்டு பரிசுக்குத் தகுதிபெறுவோர் பட்டியலில் இடம்பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nobel Prize Malaysian Prime Minister

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

*‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>