ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

0
856
Sterlite plant will permanently closed - Ops project

Sterlite plant will permanently closed – Ops project

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

நேற்று முதல் இணையதள சேவையும் சீரடைந்த நிலையில், 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 47 பேரையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும், அம்மா ஆட்சியில் கண்டிப்பாக இந்த ஆலை மீண்டும் இயங்காது என்று உறுதியளித்தார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பாக நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் துணை முதல்வர் அங்கு நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

More Tamil News

Tamil News Group websites :