ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்!

0
227
floating fish die lake diluted selam

floating fish die lake diluted selam

சேலம் அருகே உள்ள ஏரியில் நீர் மாசடைந்து ஏராளமான மீன்கள் இறந்து மிதப்பதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெய்காரப்பட்டியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதும், மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதுமே நீர் மாசடைந்துள்ளதுக்கான காரணம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

மேலும் சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை காலங்களில் சாயப்பட்டறை கழிவுகளை ஏரியில் திறந்து விடுவதால், ஏரி மாசடைந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதனையடுத்து ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஏரி மாசடைந்து வருவதால் சுற்றுவட்டார நான்கு கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து மாசடைந்த நீரை சுத்தப்படுத்துவதோடு, மீண்டும் மாசடையாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :