முன்னணி வீரர்களின் உபாதையால் தடுமாறுகிறது அவுஸ்திரேலியா!

0
661
Michael Neser replaces injured Josh Hazlewood vs England 2018

(Michael Neser replaces injured Josh Hazlewood vs England 2018)

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான அவுஸ்திரேலிய அணிக்குழாமிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹெஷல்வூட் விலகியுள்ளார்.

அவரது கால் எலும்புகளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஹெஷல்வூட் விலகியுள்ளதாக தகவல்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் உபாதையிலிருந்து மீளாத நிலையில், இவரும் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜோஷ் ஹெஷல்வூட்டிற்கு பதிலாக அணியில் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னணி பந்து வீச்சாளர்கள் உபாதைக்குள்ளாகிய நிலையில் அணித்தலைவர் தீம் பெயின் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் குழப்பத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் அவுஸ்திரேலிய அணியில் மீதமிருக்கும் முன்னணி வீரர்களான ஜெயி ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன், பில்லி ஸ்டேன்லேக் மற்றும் என்றே டை தற்போது அழைக்கப்பட்டுள்ள நேசர் ஆகிய வீரர்களில் பந்து வீச்சை பலப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

<<Tamil News Group websites>>

Michael Neser replaces injured Josh Hazlewood vs England 2018