தமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை!

0
762
southwest monsoon tamilnadu southern districts 24 hours

southwest monsoon tamilnadu southern districts 24 hours

கேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேரளா, கர்நாடக, அந்தமான் கடலோர கடல் பகுதிகளுக்கும் 31ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழையும், திருச்சியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் இன்று (மே 28ம் தேதி ) வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 150 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 122 மி.மீ. இது சராசரி இயல்பை விட 23% அதிகமாகும்’, இவ்வாறு அவர் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :