அமீர் கானின் அந்தரங்கம் கசிந்தது : பெண்ணின் தகவல்கள் கசிந்தது!

0
605
Amir Khan Affair controversy
Image Credit:

Amir Khan Affair controversy

பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே அவர் உறவு வைத்திருந்துள்ளார்.

லண்டனில் இரவு விடுதியொன்றிலேயே இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ள அப்பெண், கானின் மனைவி இது தொடர்பில் அறிந்துகொண்ட உடனேயே தன்னை திட்டி குறுந்தகவல் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பின்னர் தன்னுடன் சமாதனமாகியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இத்தகவல்களை கான் மறுத்துள்ளார். இத்தகவல் வெறும் வதந்தியெனவும், குறித்த பெண் தன்னுடன் படமொன்றை எடுத்துக்கொள்ள வந்ததாகவும், அவர் அதிக போதையில் இருந்ததால் தனது பாதுகாவலர்கள் அப்பெண்ணை தன்னிடம் நெருங்கவிடவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோபத்தாலேயே இவ்வாறு அப்பெண் நடந்துகொள்வதாக கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமீர் கான் ஏற்கனவே இவ்வாறு பல சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.