​காவல்நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

0
1054
Birthday celebration police station Thiruvarur

Birthday celebration police station Thiruvarur

திருவாரூர் மாவட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, வடுவுரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 10பேரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிவசந்திரன் என்பவர் தனது பிறந்தநாளை, வித்தியாசமான முறையில் காவல்நிலையத்தில் கட்சியினருடன் கேக்வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு ஆய்வாளர் கேக் ஊட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

காவல் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்கியது குறித்து, காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தியிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :