Minister Rajnath Singh said India refrain preparing talks Pakistan initiative
“பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் இந்தியா அதை மறுக்காது” என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் ரமழான் மாதத்தை முன்னிட்டு அமைதி நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டது. இதையடுத்து, தங்களைத் தொடர்புகொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கேட்டுக்கொண்டதாகவும் இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை தெரிவித்தது.
இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாவது,
“பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாரென்றால், நாம் ஏன் அதை மறுக்க வேண்டும். நமது அண்டை நாட்டுடன் நல்ல நட்பையே விரும்புகிறோம். ஆனால், பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். நமது எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி அந்த தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவம் நிகழ்த்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரமழான் மாதத்தை முன்னிட்டு இராணுவ நடவடிக்கைகளை நாம் நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தோம். ஆனால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Minister Rajnath Singh said India refrain preparing talks Pakistan initiative
More Tamil News
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- மாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று!
- பெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்!
- அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி!
- ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!
- கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!
Tamil News Group websites :