நீர்த்தாங்கி வாகனத்துடன் மோதிய ஸ்ரீ லங்கன் விமானம் – சாரதி பணி நீக்கம்

0
603
suspect Sri Lankan air service Mahinda Government arrest soon

(water bowser collided A320 Airbus SriLankan Airlines yesterday)

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்துடன், நீரை ஏந்திச் செல்லும் நீர்த்தாங்கி வாகனம் ஒன்று மோதியுள்ளது.

சிங்கப்பூர் நோக்கில் அதிகாலையில் பயணிக்கவிருந்த A320 (4R-ABM) ரக விமானத்தின் பின்புறத்தில் குறித்த நீர்த்தாங்கி வாகனம் மோதியதால் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமான நீர்த்தாங்கி வாகனத்தின் சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விமானம் பழுது பார்த்தல் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விமான நிலைய நிர்வாகத்திற்கு 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

(water bowser collided A320 Airbus SriLankan Airlines yesterday)

More Tamil News

Tamil News Group websites :