அபிவிருத்தி பணிகளை ஆராய பிரதமர் வடக்கு செல்கிறார்

0
355
Ranil Wickramasinghe scheduled visit Jaffna Kilinochchi districts tomorrow

(Ranil Wickramasinghe scheduled visit Jaffna Kilinochchi districts tomorrow)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் (28) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்தி திட்ட பணிகளை மேற்பார்வை செய்வதற்காகவும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வதற்காக பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளைஈ நாளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களில் அபிவிருத்தி குழுக் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், பல அபிவிருத்தி திட்டங்களும், மீள்குடியேற்றங்களும், வீடமைப்பு நடவடிக்கைகளும், காணி மீளளிப்புகளும், தொழில்வாய்ப்பு மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் என்பன வடக்கில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் மற்றும் அவற்றில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பிரதமரின் இந்த வடக்கு விஜயத்தின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.

(Ranil Wickramasinghe scheduled visit Jaffna Kilinochchi districts tomorrow)

More Tamil News

Tamil News Group websites :