குர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்

0
878
Desecrating Qur'an Canada Military

Desecrating Qur’an Canada Military

கனடாவின் கியூபெக்கின் செயின்ட் ஜீனில் அமைந்துள்ள ரோயல் மிலிட்டரி கல்லூரியில் குர்-ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குர்-ஆனில் பேக்கன் மற்றும் விந்தினை வைத்து அவமதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு கெடற் மாணவர்களே இக்காரியத்தை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் முதலாம் வருட மாணவர்கள் எனவும் ஈஸ்டர் விருந்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நடந்தவற்றை அவர்கள் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த மற்றைய மாணவர்கள் சிலர் இதனை உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரு மாணவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு கனேடிய இராணுவம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இச்செயலுக்கு முஸ்லிம் சமூகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மேலும் மாற்று மதத்தினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.