இந்தியா போன்ற தோழமை நாடுகளைப் பாதிக்கக் கூடாது: காட்ஸா சட்டத்தில் சலுகை காட்ட அமெரிக்க அமைச்சர் பாம்ப்பியோ அறிவுறுத்தல்

0
474
urged some concessions avoid compromising countries including India

urged some concessions avoid compromising countries including India

‘அமெரிக்க விரோதிகள் மீதான பொருளாதாரத் தடைச் சட்டம்’ (CAATSA) இந்தியா உள்ளிட்ட தோழமை நாடுகளைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சட்டத்தில் சில சலுகைகளுக்கு வழிவிடுமாறு அமெரிக்கச் செயலர் மைல் பாம்ப்பியோ அந்நாட்டு நாடாளுமன்றத்தை  வலியுறுத்தியுள்ளார்.

காட்ஸா என்பது அமெரிக்காவின் சட்டமாகும். இதன் மூலம் ஈரான், வடகொரியா, ரஷ்யா ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் படி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட இந்த நாடுகளுடன் இராணுவ மற்றும் உளவுத்துறை ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.

எனவே இது அமெரிக்காவின் தோழமை நாடுகளையும் பாதிக்கும் என்பதனால் பாம்ப்பியோ அதில் சில சலுகைகளுக்கு வழிவிட காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 4.5 பில்லியன் டாலர்கள் தொகைக்கு எஸ்-400 ட்ரையம்ஃப் இராணுவ ஏவுகணை விமான பாதுகாப்பு அமைப்புகளை வாங்கவுள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவக் கொள்முதல் என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

இந்நிலையில், பாம்ப்பியோ அமெரிக்க செனட் அயலுறவு குழுயின் உறுப்பினரான ராபர்ட் மெனண்டேஸ் என்பவரிடம் கூறிய போது, பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் இந்தப் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் போது இதனால் தோழமை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் சில விதி விலக்குகளை அமைக்க வலியுறுத்துவீர்களா? என்று கேட்டுள்ளார்.

காட்ஸா சட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பினால் கடந்த ஆகஸ்ட் 2017இல் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில் மேட்டிஸ் சமீபத்தில் இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் சேர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஆனால் மெனண்டஸ், சலுகைகள் பற்றி எதுவும் உறுதியாகக் கூறவில்லை என்று தெரிகிறது. அதாவது சில நாடுகளுக்கு மட்டும் சலுகை காட்டினால் மற்ற நாடுகளும்தான் கேட்கும். சலுகைகள் காட்டினாலும் சட்டத்தின் சாராம்சம் மீறப்படக்கூடாது என மெனண்டஸ் கூறியுள்ளார்.

urged some concessions avoid compromising countries including India

More Tamil News

Tamil News Group websites :