இன்றைய ராசி பலன் 25-05-2018

0
1237
Today horoscope 25-05-2018

(Today horoscope 25-05-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 11ம் தேதி, ரம்ஜான் 9ம் தேதி,
25.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:54 வரை;
அதன் பின் துவாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:56 வரை;
அதன் பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த, சித்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : முகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

ரிஷப ராசி நேயர்களே !
மதி நுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். இல்லத்தாருடன் ஏற்பட்ட பகை மாறும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
மாற்றங்கள் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய விதத்தில் வருமானங்கள் வந்து சேரும். தொழில் முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வருமானம் திருப்திதரும்.

கடக ராசி நேயர்களே !
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வீடுமாற்றம் உறுதியாகலாம். வீண் விரங்கள் ஏற்படும். குடும்ப பொறுப்புகள் கூடும். மன அமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளைச் சொல்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
மனக்குழப்பம் அகல மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

கன்னி ராசி நேயர்களே !
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி கைகூடும்.

துலாம் ராசி நேயர்களே !
செல்வந்தர்களின் உதவியால் சிந்தை மகிழும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். தாய் வழி ஆதரவு உண்டு. பூர்வீகச் சொத்துக்களால் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு உண்டு.

தனுசு ராசி நேயர்களே !
வாய்ப்புகள் வந்து சேரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகர ராசி நேயர்களே !
தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருள் சேர்க்கை உண்டு. அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

கும்ப ராசி நேயர்களே !
ஆனந்தம் அதிகரிக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது.

மீனம் ராசி நேயர்களே !
பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வியாபாரம் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தினருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 25-05-2018