நாடாளுமன்றுக்கு இன்று வருகிறது 20ஆவது திருத்தச் சட்டமூலம்..!

0
677
20th amendment constitution present today

(20th amendment constitution present today)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையே இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண வானிலையைக் கருத்திற்கொண்டு இந்த பிரேரணை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :