20ஆவது திருத்த சட்டமூலம் : சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டது

0
528
JVP hands over 20th amendment Constitution Speaker

(JVP hands over 20th amendment Constitution Speaker)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணையை சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக மேற்படி 20 ஆவது திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது.

இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள போதும் பலர் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags:JVP hands over 20th amendment Constitution Speaker,JVP hands over 20th amendment Constitution Speaker,