கனடாவில் விளையாடப்போகும் லசித் மாலிங்க! : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

0
642
global t20 league canada 2018 marquee players list

(global t20 league canada 2018 marquee players list)

உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் போட்டிகளை போன்ற இருபதுக்கு-20 தொடரொன்றை கனடா ஏற்பாடு செய்துள்ளது.

உலகத் தரம் வயாந்த கிரிக்கெட் தொடர் என்பதால், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை கனடா அணுகியுள்ளது.

இதன்படி வீரர்களின் பேச்சுவார்த்தையை நடத்திய பின்னர், தங்களின் வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள முதன்மை வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இந்த வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க உள்வாங்கப்பட்டுள்ளார்.

இவருடன் உலகின் முன்னணி இருபதுக்கு-20 வீரர்களாக வலம் வரும், கிரிஸ் கெயில், சுனில் நரைன், டவைன் பிராவோ, டெரன் சமி, என்ரே ரஷல், டேவிட் மில்லர், சஹிட் அப்ரிடி மற்றும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைக்கப்பட்டுள்ளார்.

கிளோபல் டி20 தொடர் எதிர்வரும் ஜுன் 28ம் திகதி முதல் ஜுலை 15ம் திகதி வரை கனடாவில் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>