நம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…!

0
683
Diseases affect lungs, lungs diseases, lungs, nuraiyeeral noi, tamilhealth news

Diseases affect lungs }

நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள்

மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.

நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. இதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இந்தத் தடுப் பூசிகளைப் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.

இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிகரெட் பழக்கம் தான். அத்தோடு விறகு அடுப்புப் புகையை அடிக்கடி சுவாசிக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படுகின்றது.

வசிக்கும் இடத்தில் அதிகப் புகையற்ற சூழலை ஏற்படுத்தினாலே இந்த நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம்.

Related image

நுரையீரலை பாதிக்கும் புற்றுநோய்

நுரையீரல் புற்று நோயால் 16 லட்சம் பேர் ஒரு ஆண்டில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

இந்த புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் சிகரெட் புகைப்பது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் புற்று நோய் ஏற்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாம் நிலை சிகரெட் புகைப் பாதிப்பால் பெண்களும், குழந்தைகளும் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

நெஞ்சு வலி, தொடர்ந்து இருமல், இருமலுடன் ரத்தம் வெளியேறுதல், எடை குறைதல், சுவாசித்தலில் பிரச்னை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

இந்த நோய் முற்றிய பிறகு எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலி, நகங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.

தினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தாலே இந்த புற்று நோயில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

Tags: Diseases affect lungs

<< RELATED HEALTH NEWS >>

*ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..!

*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://tamilsportsnews.com/