சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்

0
958
Anti Violence Tamils People Thoothukudi protest Jaffna Nallur

(Anti Violence Tamils People Thoothukudi protest Jaffna Nallur)
தமிழகம் தூத்துக்குடியில் பொது மக்களின் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறிய துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?,

இந்திய அரசே ஆலை அவசியமானதோ – தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஈழ நல்லூரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Anti Violence Tamils People Thoothukudi protest Jaffna Nallur