தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

0
771
Shoot self-defense - Chief Minister Palanisamy's explanation

Shoot self-defense – Chief Minister Palanisamy’s explanation

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், மேலும் அவர் செய்தியாளர்களை சந்திக்கும்போது உடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இது குறித்து முதலமைச்சர் பேசுகையில் – “மக்கள் அமைதியான வழியில்தான் போராடி வந்தனர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை, தற்போது ஆலையத்துக்கான மின்சாரத்தையும் துண்டித்துள்ளோம்.

இதனையடுத்து எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறையை கொண்டுவந்துள்ளார்,

மேலும் அமைதி போராட்டத்தில் சமூக விரோதிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டார்கள், மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தனர், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர், அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால்தான் முதலில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர், பிறகு தடியடி நடத்தினர், கடைசியில் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது, மேலும் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட செயல் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சியெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :