இளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு

0
1206
28 old boy killed sword attack mullaitivu selvapuram

(28 old boy killed sword attack mullaitivu selvapuram)
முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதுடைய வரதராஜா சதாநிசன் என்ற இளைஞனை நேற்றையதினம் மாலை வரை காணாத நிலையில் குடும்பத்தார் தேடியுள்ளனர்.

இதேவேளை செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த அருகில் உள்ள அயலவர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்று, மோட்டார் சைக்கிளை பார்வையிட்டுள்ளதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்தில் வெட்டப்பட்டநிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து செல்வபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை