ஒரே நேரத்தில் 3 நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பதறவைக்கும் காணொளி

0
920
Friends Drown India Rajasthan

Friends Drown India Rajasthan

பழக்கமில்லாத நீர் நிலைகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது.

அதை புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் குளிக்கச் செல்வது ஆபத்தில் முடிந்து விடுவதுண்டு.

அந்தவகையில், இந்தியாவின் ராஜஸ்தானில் நண்பர்கள் மூவர் குளமொன்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இளம் நண்பர்கள் மூவர் தமது ஊருக்கு திரும்பும் வழியில் குளிக்கும் பொருட்டு, குளமொன்றுக்குள் இறங்கியுள்ளனர்.

தாம் குளிக்கும் காட்சியை பதிவு செய்யும் பொருட்டு, கரையில் கைப்பேசியில் கமெராவை வைத்துள்ளனர்.

இதன்பின்னர் குளிக்கும் பொருட்டு, குளத்தில் இறங்கியபோது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இக்காட்சி கைப்பேசியில் பதிவாகியுள்ளதுடன், பொலிஸார் அதனைக் கண்டெடுத்துள்ளனர்.

மூவருக்கும் ஒழுங்காக நீச்சல் தெரியாதென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Credit: AB TV