மிஸ்டர் 360க்கு வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்!!! : கூறியது என்ன?

0
726
Cricket players reaction AB DE Villiers retirement

(Cricket players reaction AB DE Villiers retirement)

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் ரசிகர்களாலும், சக வீரர்களாலும் அதிகம் விரும்பப்படும் வீரர் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்.

நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்து, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வில்லியர்ஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில் முன்னணி வீரர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துகளை கீழே பார்க்கலாம்….

சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்து…

மைதானத்தில் மிஸ்டர் 360யின் துடுப்பாட்டத்தை பார்ப்பது பிடித்திருந்தது. அதேபோன்று மைதானத்துக்கு வெளியிலும் 360 டிகிரியிலும் வெற்றிபெற வேண்டும். எனது அன்பான வாழ்த்துகள்…

எஞ்சலோ மெத்தியூஸ்…

உங்களது அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள். கிரிக்கெட்டில் சிறந்த பொழுது போக்கு வீரர் மாத்திரம் இன்றி சிறந்த மனிதர். உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்…

ரோஹித் சர்மா…

உங்களது கிரிக்கெட் ஆட்டத்தை போன்று வாழ்க்கையும் உற்சாகமானதாக அமையட்டும். ஓய்வுபெற்றதற்கு வாழ்த்துகள்.. உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துகள்…

மஹேல ஜயவர்தன…

ஒரு சிறந்த வீரர். எனது அன்பான வாழ்த்துகள்… அற்புதமான கிரிக்கெட் வீரர் மாத்திரமின்றி சிறந்த மனிதர்…

வீரேந்திர செவாக்…

வாழ்த்துகள் வில்லியர்ஸ். கிரிக்கெட்டில் அதிகம் பிடித்த வீரர். அருமையான கிரிக்கெட் வாழ்க்கை. நீங்கள் இல்லாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் மந்தமாகிவிடும். ஓய்வுபெற்றாலும் உங்களை இந்த உலகம் கொண்டாடும்…

சஹிட் அப்ரிடி…

சம்பியன் துடுப்பாட்ட வீரர். உங்களது துடுப்பாட்டத்தை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு புதுவிதமான துடுப்பாட்ட யுத்திகளும் கண்கவர் விருந்து. அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கும் “ஸ்வீப் ஷொர்ட்” நீங்கள் ஒரு மிக திறமையான வீரர். உங்களின் திறமைக்கு மதிப்பளிக்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரர்.

<<Tamil News Group websites>>

Cricket players reaction AB DE Villiers retirement