14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது

0
1586
14 child's father killed

(14 child’s father killed Son arrested)
பனாமுர எத்கால விராலகல பிரதேசத்தில் 14 பிள்ளைகளின் 90 வயது தந்தை அவரது மகன் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மகள் ஒருவரின் இல்லத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையில், இவரின் பிள்ளைகள் இவருக்கு உதவி செய்து நன்றாகக் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், மகன் ஒருவரால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உயிரிழந்தவரின் 56 வயதுடைய மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வீரகெடிய பிரதேசத்தில் மணமுடித்து, கிரி இப்பன் ஆர பிரதேசத்தில் வசித்து வந்த மரங்கள் வெட்டும் 56 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னர் தனது தகப்பனின் சொந்த வீட்டிற்கு வந்து அவருடன் வசித்து வந்துள்ளதோடு, மரம் அறுக்கும் தொழில் மூலமாக நாள் ஒன்றுக்கு 4000 ரூபா முதல் 5000 ரூபா வரை உழைத்தும் வந்துள்ளார்.

தினமும் மாலை வேளையில் மதுபானம் அருந்துவதும் நன்றாக சமைத்து உண்பதும் ஒரு பழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி இரவு தனது தகப்பனை கொலை செய்த பின்னர் மறுநாள் காலை வரை தனது தகப்பனின் உயிரற்ற உடலுடன் நித்திரை கொண்டுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் 63 வயதான மகன் ஒருவர் பொலிஸாருக்கு இந்த கொலை தொடர்பாக முறைப்பாடு செய்த நிலையில், சந்தேக நபர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது தகப்பனை ஒருவரும் கவனிக்காமையினால் தனக்கும் அவரை கவனிக்க இயலாமையினால் அவரை கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டிலில் இருந்து தடி ஒன்றையும் கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தடியால் தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பிரேத பரிசோதனை மேற்கொண்டு மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு எம்பிலிபிடிய சட்ட வைத்திய அதிகாரிக்கு எம்பிலிபிடிய பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 14 child’s father killed Son arrested