யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி

0
405
unknown group attack family men jafna kaarainagar death latest news

(Two people killed Electricity attacked Jaffna)
யாழ்ப்பாணம் – கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்த கோர சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக கரவெட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் டிஸ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரிவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

கேபிள் ரிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் 50 வயதுடைய ஜெகனாந்தன் என்பவர் மற்றும் 29 வயதுடைய சஞ்சீவன் ஆகிய இருவருமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Two people killed Electricity attacked Jaffna