ஹைதராபாத் அணியுடன் மோதப்போகும் அணி எது? : இன்று எலிமினேட்டர்!

0
622
kolkata knight riders vs rajasthan royals Eliminator 2018

(kolkata knight riders vs rajasthan royals Eliminator 2018)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேற்று தகுதிபெற்றுள்ளது.

எனினும் தோல்வியடைந்த ஹைதராபாத் அணியுடன், எந்த அணி குவாலிபையர் இரண்டில் மோதும் என்பது இன்று தீர்மானிக்கப்படும்.

இன்றைய போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், கொல்கத்தா அணியின் ஆதிக்கம் அதிமாக இருக்கும் என விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் மோசமான நிலையில் இருந்து முட்டிமோதி பிளே-ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ள ராஜஸ்தான் அணியும் சளைத்தவர்கள் அல்ல என கடைசி இரண்டு போட்டிகளில் எதிரணிகளுக்கு உணர்த்தியுள்ளனர்.

முன்னணி வீரர்களான பட்லர், பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியிருந்தாலும், ராஹுல் டிருப்பாதி, ஸ்ரேயாஷ் கோபால், கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் சஞ்சு செம்சுன் ஆகிய இளம் வீரர்கள் அணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றனர்.

மறுபக்கம் வெளிநாட்டு வீரர்களான ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹென்ரி கிலாசன் ஆகியோரின் ஆட்டங்களும் அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

இதனால் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அணியாக ராஜஸ்தான் உருவாகியுள்ளது.

இதேவேளை கொல்கத்தா அணிக்கு சொந்த மைதானம் என்ற மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு வீரர்களின் பெரும் பங்கும், அணித் தலைவர் என்ற ரீதியில் தினேஷ் கார்த்திக்கின் நுணுக்கமான துடுப்பாட்டம் மற்றும் தலைமை பொறுப்பும் அந்த அணியின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றன.

அதுமாத்திரமின்றி இளம் வீரர்களான சுப்மான் கில்லின் நிதான துடுப்பாட்டம், பிரசித்தின் வேகப்பந்தும் அணிக்கு அவ்வப்போது உதவியளிக்கின்றன.

இவைகளை வைத்து பார்க்கும் போது இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை தௌிவாக்குகின்றது.

எனினும் ஒரு அணி மாத்திரமே இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெறமுடியும் என்ற கட்டத்தில் இன்று வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டயாம். எந்த அணி ஹைதராபாத் அணியுடன் மோதும்? இன்று இரவு 7 மணிக்கு போட்டி… பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

<<Tamil News Group websites>>

kolkata knight riders vs rajasthan royals Eliminator 2018