தினேஷ் கார்த்திக்கின் தலைமைத்துவம் எப்படி? : கூறுகிறார் கம்பீர்!

0
448
Gautam Gambhir picks winner Eliminator 2018

(Gautam Gambhir picks winner Eliminator 2018)

ஐ.பி.எல். தொடரில் இம்முறை டெல்லி அணிக்கு தலைமை தாங்கியிருந்த கௌதம் கம்பீர், கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக்கின் தலைமைத்துவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

கம்பீர் அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இம்முறை டெல்லி அணிக்காக கம்பீர் விளையாடியிருந்த நிலையில், டெல்லி அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

தற்போது பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக்கின் தலைமைத்துவம் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பீர் குறிப்பிடுகையில்,

“உணர்வுரீதியாக எனது ஆதரவு கொல்கத்தா அணி பக்கம் உள்ளது. இன்று சொந்த மைதானத்தில் விளையாடுவதால் ராஜஸ்தான் அணியை விடவும் கொல்கத்தா அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அதுவும் கொல்கத்தா அணியை பொருத்தவரையில் முக்கியமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது. அதிலும் தினேஷ் கார்த்திக்கின் தலைமைத்துவம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

போட்டியின் முக்கியமான தருணங்களில் தினேஷ் கார்த்திக்கின் செயற்பாடுகள், யுத்திகள் மற்றும் சுனில் நரைன், குல்டீப் யாதவ் ஆகிய பந்து வீச்சாளர்களை சரியான இடங்களில் பயன்படுத்துவது. இதையெல்லாம் பார்க்கும் போது இன்றைய போட்டியின் வெற்றி கொல்கத்தா அணி பக்கம் என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் தெரிவித்த கம்பீர்,

“ராஜஸ்தான் அணியை பொருத்தவரையில் சஞ்சு செம்சுன் சிறந்த துடுப்பாட்ட வீரர். எனக்கு மிகவும் பிடித்த துடுப்பாட்ட வீரர். அதிலும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டக்கூடிய வீரர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>

Gautam Gambhir picks winner Eliminator 2018