பிரான்ஸில் பாடசாலை ஒன்றில் 130 பேர் வரை கைது!

0
371
130 protesters arrested frontt Arago

பாரிஸிலுள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 130 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1130 protesters arrested frontt Arago

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Arago உயர்கல்வி பாடசாலைக்கு (லீசே) முன்பாக நேற்று (மே 22), கூடிய 15,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தினுள் 200 வரையான முகமூடி அணிந்த கலவரக்காரர்களும் உள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள கடைகளின் கண்ணாடிகளை உடைத்தும், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும் மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த காவற்துறையினர் ஆர்ப்பாட்டக்குழுவை சேர்ந்த 24 பேர்களையும், கலவரக்காரர்களில் 101 பேர்களையும் பாடசாலை வளாகத்துக்குள் வைத்து கைது செய்துள்ளனர். கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பாய்ச்சி கலவரக்காரர்களை அடக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும். கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியமையால், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்ததுடன் மொத்தமாக எட்டு பேர்வரை காயமடைந்திருந்தனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**