உலகக்கிண்ண போட்டியை தவறவிடும் ஆர்ஜன்டீனாவின் முன்னணி வீரர்

0
621
Argentina goalkeeper Sergio Romero miss world cup 2018

(Argentina goalkeeper Sergio Romero miss world cup 2018)

ஆர்ஜன்டீன அணியின் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோ இம்முறை நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜன்டீன உதைப்பந்தாட்ட சம்மேளனம் நேற்று உலகக்கிண்ண அணிக்குழாமை அறிவித்திருந்தது.

இதில் முன்னணி கோல் கீப்பரான சேர்ஜியோ ரொமிரோவின் பெயரையும் இணைத்திருந்தது.

இந்நிலையில் சேர்ஜியோ ரொமிரோவுக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் உபாதை காரணமாக உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

31 வயதான மென்செஸ்டர் சிட்டி அணி வீரரான சேர்ஜியோ ரொமிரோ, ஆர்ஜன்டீன அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலும் இறுதியாக 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

தற்போது இவரது இழப்பு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஏற்கனவே அணியில் இணைக்கப்பட்டுள்ள வில்லி கெபல்லாரோ, பிரான்கோ அமானி ஆகிய கோல் கீப்பர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள். இதனால் அவரின் இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சேர்ஜியோ ரொமிரோவுக்கு பதிலாக நஹுவல் குஸ்மானை ஆர்ஜன்டீன அணி பெயரிட்டுள்ளது. இவர் ஆர்ஜன்டீன அணிக்காக 6 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>