(Saamy Square expectations Devi Sri Prasad music)
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “சாமி ஸ்கொயர்”. விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் வரும் 26-ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது, காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இப் படத்தில் இடம்பெறும் டர்ர்ர்ரனக்கா… என்ற பாடல் அனைத்து தரப்பினராலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ”ரங்கஸ்தலம்”, ”பரத் அனே நேனு” படங்கள் ஹிட்டடித்த நிலையில், ”சாமி ஸ்கொயர்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் நடைபெற இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
<MOST RELATED CINEMA NEWS>>
* கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!
* கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!
* கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!
* தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!
* 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!
* விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!
* சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!
* லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
* டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!
Tags :-Saamy Square expectations Devi Sri Prasad music
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-