(tamilnews Helpline inform students affected adverse weather)
இயற்கை சீற்றம் மற்றும் வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக அவர்களுக்கு நிவாரணங்களை உரிய வகையில் வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.
சீருடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பாடநூல்கள் போன்ற கல்வி உபகரணங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருக்குமாயின் 1-9-8-8 என்ற அவசர உதவி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்குமாறு அமைச்சர் தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது, கல்விப் பொதுத் தராதர உயர் தரம், மற்றும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.
1988 என்ற அவசர இலக்கத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilnews Helpline inform students affected adverse weather)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு
- மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு
- தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா